சைவ சமயப் பரீட்சை...
வண்ணை சாந்தையர் மடம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலய சைவ சமய அபிவிருத்திக் கழகத்தின் சைவ சமய அறிவுப் பரீட்சையும் செயல்முறைப் பரீட்சையும் எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் இப்போட்டியில் தரம் 1-2 மாணவர்களுக்கு நீதிநூல் மனனப் போட்டியும் தரம் 3-11 வரையான மாணவர்களுக்கு சைவ சமய அறிவுப் பரீட்சை, கோலம் போடுதல், மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல் ஆகிய செயன்முறைப் போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
போட்டியில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் சைவ சமய அபிவிருத்திக் கழக அறிவகம், இல 82 நாவலர் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டிப் பரீட்சைகள் அக்டோபர் 18ஆம் திகதியும் நீதி நூல் மனனப் போட்டி அக்டோபர் 25 ஆம் திகதியும் செயன்முறைப் பரீட்சைகள் நவம்பர் 1ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. இவற்றிற்கான விண்ணப்ப முடிவுத் திகதி இம்மாதம் 25ஆம் திகதி என சைவ சமய அபிவிருத்திக் கழக பரீட்சைச் செயலர் சு.சிறிகாந்தன் தெரிவித்துள்ளார்.
சைவ சமயப் பரீட்சை...
 
        Reviewed by Author
        on 
        
September 15, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
September 15, 2015
 
        Rating: 


No comments:
Post a Comment