அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க ஓபன் போட்டியில் சாம்பியன்: 46 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனை படைத்த லியாண்டர் பெயஸ்- மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி..


அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)– மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது.

இதில் அமெரிக்காவின் சாம் கியூரே, பெதானி ஜோடியை லியாண்டர் பெயஸ் (இந்தியா)– மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி 6–4, 3–6, 10–7 என்ற கணக்கில் விழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

லியாண்டர் பெயசும்– ஹிங்கிசும் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும்.

இந்த ஆண்டில் ஏற்கனவே அவுஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை இந்த ஜோடி வென்றிருந்தது.

கடந்த 1969ம் ஆண்டுக்கு பிறகு கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரே ஆண்டில் ஒரே இணை 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வது இதுவே முதன்முறையாகும்.

42 வயதான பெயஸ்க்கு இது 16வது கலப்பு இரட்டையர் பட்டமாகும். ஒட்டு மொத்தமாக அவர் வென்ற 17வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.

அதே போல் ஹிங்கிஸ் பெற்ற 19வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும். அவர் ஒற்றையர் பிரிவில் 5 பட்டமும், மகளிர் இரட்டையர் பிரிவில் 10 பட்டமும், கலப்பு இரட்டையர் பிரிவில் 4 பட்டமும் பெற்றுள்ளார்.

அமெரிக்க ஓபன் போட்டியில் சாம்பியன்: 46 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனை படைத்த லியாண்டர் பெயஸ்- மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி.. Reviewed by Author on September 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.