அமெரிக்காவில் இலண்டன் தமிழ் இளைஞைர்களின் உலக சாதனை!...
அமெரிக்காவில் நடைபெற்ற இசின்றுயு உலகக் கராத்தே நிபுணத்துவப் போட்டியில் பிரித்தானியா தமிழ் இளைஞர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த மாதம் 6-8 திகதிகளில் அமெரிக்காவின் நியுஜெர்சி மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் நகரில் இசின்றுயு உலகக் கராத்தே நிபுணத்துவப் போட்டி நடைபெற்றது.
650க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் லண்டனில் இருந்து சென்செய் ராமதாஸ் நெறியாள்கையில்
அவரின் கோசின் இசின்றுயு கராத்தே (Goshin Isshinryu Karate Association UK) பிரித்தானியா சார்பில் 25 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த மாணவர்களில் 19 பேர் தங்க வெள்ளி, பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
சென்செய் ராமதாஸ் (Sensei Ramathas) அவர்களின் கராத்தே பயிற்சி மையங்கள் Ley Street, Ilford, Gants Hill, East Ham, Sutton, Catford, Jaffna and India ஆகிய இடங்களில் இருப்பதும்,
பெருந்தொகையான மாணவர்கள் பயிற்சி எடுத்து வருவதும் பாராட்டத்தக்கது.
அத்தோடு அவர் சமூக நலத் திட்டங்கள் பலவற்றிற்கு உதவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இலண்டன் தமிழ் இளைஞைர்களின் உலக சாதனை!...
Reviewed by Author
on
September 12, 2015
Rating:

No comments:
Post a Comment