ஆஸ்கார் விருதுக்கு செல்லும் ஈழத்தமிழர் நடித்த ‘தீபன்’ திரைப்படம்...
சிறந்த வெளிநாட்டு படங்களின் வரிசையில் சோபா சக்தி என்ற ஈழத்தமிழர் நடித்த ‘தீபன்’ என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டு இயக்குனரான சாக் ஆடியார் இயக்கி இலங்கை நாட்டின் எழுத்தாளரும் ஈழத்தமிழருமான சோபா சக்தி நடித்து 2015ம் ஆண்டு வெளியான படம் ‘தீபன்’.
இலங்கை உள்நாட்டு போரிலிருந்து தப்பித்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் குடியேறும் சோபா சக்தி(தீபன்) ஒரு அகதியாக சந்திக்கும் அவலங்களையே இந்த படத்தில் திரைக்கதையாக காட்டப்பட்டுள்ளது.
சோபா சக்தியுடன் இணைந்து தமிழ் நாட்டை சேர்ந்த காளீஸ்வரி(யாழினி) என்ற தமிழரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஈழத்தமிழர்களின் வெளிநாட்டு வாழ்க்கையை உணர்வு பூர்வமாக வெளிக்காட்டிய இந்த திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் உயரியதாக கருதப்படும் தங்கப்பனை(Palme d’Or) என்ற விருதை ஏற்கனவே வென்றுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள தேசிய சினிமா மையத்தில் அதன் தலைவரான Frederique Bredin என்பவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைப்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் எதிர்வரும் 88-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் பிரான்ஸ் நாட்டிலிருந்து 5 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 5 படங்களில் ‘தீபன்’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் பல விருதுகளையும் குவித்து வருகிறது.
’தீபன்’ திரைப்படம் ஆஸ்கார் விருதில் பங்கேற்பது தொடர்பான முறையான அறிவிப்பு எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 14ம் திகதி வெளியாகும்.
பின்னர், 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ம் திகதி அமெரிக்காவில் உள்ள டொல்பி தியேட்டரில் நடைபெறும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ’தீபன்’ உள்ளிட்ட 5 பிரான்ஸ் படங்களும் திரையிடப்பட்டு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படும்.
ஆஸ்கார் விருதுக்கு செல்லும் ஈழத்தமிழர் நடித்த ‘தீபன்’ திரைப்படம்...
Reviewed by Author
on
September 18, 2015
Rating:
Reviewed by Author
on
September 18, 2015
Rating:


No comments:
Post a Comment