அண்மைய செய்திகள்

recent
-

4G தொழில்நுட்பத்தை விட 10 மடங்கு வேகமான 5G: எப்போது சந்தைக்கு வருகிறது...


4G தொழில்நுட்பத்தை விட அதிவேகமான 5G தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சிகளை அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக வெரிசோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இணைய பயனாளர்களுக்கு உதவும் வகையில் 2G தொழில்நுட்பம் கடந்த 1991 ஆம் ஆண்டு பின்லாந்து நாட்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர், 3G, 4G என்று வந்துவிட்டது.

தற்போது புழக்கத்தில் உள்ள 4G எனப்படும் 4வது தலைமுறை தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணையவசதி, விளையாட்டுகள், துல்லியமான காட்சிகளை அளிக்கும் தொலைக்காட்சிகள் போன்ற சேவைகளை நாம் பெற்றுவருகிறோம்.

4G தொழில்நுட்பம் மூலம் அதிகபட்சமாக நொடிக்கு 200 Mbps வரையிலான தகவல்களை நாம் பெறலாம்.

இந்நிலையில் அமெரிக்காவின் தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் 5G தொழில்நுட்பம் குறித்த தனது ஆராய்ச்சியை வரும் 2016ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளதாகவும், 2020ஆம் ஆண்டில் 5G தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்த முயற்சிப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ரிமொர்ட் சர்ஜரி( ஒரு நாட்டில் இருந்தபடியே வேறு நாட்டில் உள்ள நோயாளிக்கு சிகிச்சையளிப்பது) தானாகவே இயங்கும் கார் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது.

இதற்காக நோக்கியா, சாம்சங், எரிக்சன், போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள 4G தொழில்நுட்பத்தை விட 10 மடங்கு வேகமானதாக 5G தொழில்நுட்பத்தை உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் ஒரு நொடிக்கு 2GB வேகத்தில் நாம் தகவலை பெற முடியும். அதாவது கண்ணிமைக்கும் வேகத்தில் ஒரு படத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

ஒரு வேளை இந்த 5G தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தால் தொழில்நுட்பங்களின் அத்தியாயம் மாற்றிக்கூட எழுதப்படலாம்.



4G தொழில்நுட்பத்தை விட 10 மடங்கு வேகமான 5G: எப்போது சந்தைக்கு வருகிறது... Reviewed by Author on September 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.