பொலிஸாருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் 120 முறைப்பாடுகள்...
பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள 120 முறைப்பாடுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகளுக்கு அமைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்காமை பக்கச்சார்பாக செயற்பட்டமை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் இவ்வாறு பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை அடுத்த வாரம் முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறான முறைப்பாடுகளுடன் தொடர்புடையவர்களை பிராந்திய அலுவலகங்களூடாக வரவழைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். எனவே பொலிஸாரின் தவறான செயற்பாடுகள் மற்றும் பக்கச்சார்பு தொடர்பான முறைப்பாடுகளை தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலக்கம் 09, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், கொழும்பு -07. என்ற முகவரியில் பதிவு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் 120 முறைப்பாடுகள்...
Reviewed by Author
on
October 25, 2015
Rating:

No comments:
Post a Comment