வீதி அபிவிருத்திக்காக ஆசிய வங்கி நிதியுதவி...
இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களின் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 800 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளது.
தெற்கு, சப்ரகமுவ மத்திய, வடமத்திய மாகாணங்களிலும் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்திலும் இவ்வீதி அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பின்தங்கிய பிரதேசங்களில் 3,108 கிலோ மீற்றர் வீதியும் 248 தேசிய வீதிகளும் இந்நிதியினூடாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன. இதற்காக சுமார் 906 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்திக்காக ஆசிய வங்கி நிதியுதவி...
Reviewed by Author
on
October 25, 2015
Rating:

No comments:
Post a Comment