அண்மைய செய்திகள்

recent
-

சபையில் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிப்பு:பாதுகாப்புக்கு 30 ஆயிரத்து 665 கோடி ரூபா....


2016ஆம் நிதி­யாண்­டுக்­கான அர­சாங்­கத்தின் மொத்த செல­வி­ன­மாக ஒரு இலட்­சத்து 94 ஆயி­ரத்து 145 கோடியே நான்கு இலட்­சத்து 38 ஆயிரம் ரூபாவை மதிப்­பீடு செய்­துள்­ளது. (194,145,04,38,000) இதே­வேளை பாது­காப்பு அமைச்­சுக்­கென 30 ஆயி­ரத்து 665 கோடியே 78 இலட் சத்து 24 ஆயிரம் (30 665,78,24 000) ரூபாவை ஒதுக்­கீடு செய்­தி­ருக்கின்­றது. மீள்­கு­டி­யேற்றம். இந்து கலா­சார அமைச்­சுக்கு 378,01,30,000 ரூபா வும் புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 68,68,00 000 ரூபா
வும் கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்­சுக்கு 79,08,15000 ரூபாவும் கல்வி அமைச்­சுக்கு 18,597,60,30000 ரூபா வும் ஒதுக்­கீடு செய்­வ­தற்கு மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும் இம்­மு­றையும் 2014/ 2015 ஆம் நிதி­யாண்­டு­களை 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான பாது­காப்பு செல­வீனம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள அதே வேளை மேற்­படி நிதி­யாண்­டு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கென பிர­தமர் அலு­வ­ல­கத்­துக்­கான நிதி ஒதுக்­கத்தில் அதி­க­ரிப்பு இடம்­பெற்­றுள்­ளது.

அந்த வகையில் ஜனா­தி­ப­திக்­கான செல­வீனத் தொகை­யாக 239 கோடியே 20 இலட்­சத்து 75 ஆயிரம் ரூபாவும் பிர­தமர் அலு­வ­ல­கத்­துக்­கான செல­வீ­ன­மாக 48கோடியே 62 இலட்சம் ரூபா மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான அரசின் மொத்த செல­வி­ன­மாக ஒரு இலட்­சத்து 94 ஆயி­ரத்து 145 கோடியே 4 இலட்­சத்து 38 ஆயிரம் (194,145,04,38,000) ரூபாவை மதிப்­பீடு செய்­துள்ள அர­சாங்கம் இதில் அதி­கப்­பட்­ச­மாக 30 ஆயி­ரத்து 665 கோடியே 78 இலட்­சத்து 24 ஆயிரம் (30,665,78,24,000) ரூபாவை பாது­காப்பு அமைச்­சுக்­கென ஒதுக்­கீடு செய்­துள்­ளது.
அந்த வகையில் 2014 ஆம் மற்றும் 2015 ஆம் நிதி­யாண்­டு­க­ளுக்­கான மொத்த அரச செல­வி­னங்­களை விடவும் 2016 ஆம் ஆண்­டுக்­கான அரச செல­வி­னத்­துக்­கான தொகை அதி­க­மா­கி­யுள்­ள­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் செல­வி­னத்­துக்­கென ஒதுக்­கப்­பட்ட தொகை­க­ளிலும் பார்க்க இம்­முறை பாது­காப்பு அமைச்­சுக்கு அதி­கப்­ப­டி­யான நிதி ஒதுக்­கீடு மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

எனினும் 2014 ஆம் மற்றும் 2015 ஆம் நிதி­யாண்­டு­க­ளுக்­கான ஒதுக்­கீ­டு­களில் காணப்­பட்ட ஜனா­தி­ப­திக்­கான செல­வி­னங்­க­ளிலும் பார்க்க 2016 ஆம் ஆண்டில் ஜனா­தி­ப­திக்­கான செல­வினம் குறைக்­கப்­பட்­டுள்ள அதே­நேரம் பிர­தமர் அலு­வ­ல­கத்­துக்­கான செல­வின மதிப்­பீடு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த வகையில் 2014 ஆம் நிதி­யாண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்டு சட்­டத்தின் பிர­காரம் அவ்­வாண்டில் அரசின் மொத்த செல­வினம் ஒரு இலட்­சத்து 59 ஆயி­ரத்து 825 கோடியே 25 இலட்­சத்து 18 ஆயிரம் (159,825,25,18,000) ரூபா­வாக இருந்­துள்­ள­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் 2014 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட 2015 ஆம் நிதி­யாண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்டு சட்ட மூலத்தின் பிர­காரம் அந்த ஆண்­டுக்­கான மொத்த அரச செல­வி­ன­மாக ஒரு இலட்­சத்து 81 ஆயி­ரத்து 229 கோடியே 27 இலட்­சத்து 18 ஆயிரம் (181,229,27,18,000) ரூபா மதிப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

எனினும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்டு சட்ட மூலத்தில் அவ் ஆண்­டுக்­கான மொத்த அரச செல­வி­ன­மாக ஒரு இலட்­சத்து 94 ஆயி­ரத்து 145 கோடியே 4 இலட்­சத்து 38 ஆயிரம் (194,154,04,38,000) ரூபா மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அதேபோல் 2014 ஆம் நிதி­யாண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்டு சட்­டத்தின் பிர­காரம் அந்த ஆண்­டுக்­கான பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் செல­வினம் 25 ஆயி­ரத்து 603 கோடியே 26 இலட்­சத்து 41 ஆயி­ரத்து 285 (25,603,26,41,285) ரூபா இருந்­துள்­ள­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் 2014 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட 2015 ஆம் நிதி­யாண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்டு சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்­சுக்­கான செல­வி­ன­மாக அந்த ஆண்­டுக்கு 28 ஆயி­ரத்து 502 கோடியே 20 இலட்சம் (28,502,20,00,000) ரூபா மதிப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றி­ருக்­கையில் 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்டு சட்­ட­மூ­லத்தில் பாது­காப்பு அமைச்­சுக்­கான செல­வி­ன­மாக 30 ஆயி­ரத்து 665 கோடியே 78 இலட்­சத்து 24 ஆயிரம் (30,665,78,24,000) ரூபா மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதே நேரம் 2014 ஆம் நிதி­யாண்டில் ஜனா­தி­ப­திக்­கான செல­வி­ன­மாக 856 கோடியே 77 இலட்சம் (856,77,00,000) ரூபா இருந்­துள்­ள­துடன் 2015 ஆம் நிதி­யாண்­டுக்­கான மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக் காலத்து ஜனா­தி­பதி செல­வின மதிப்­பீ­டா­னது 959 கோடியே 21 இலட்­சத்து 50 ஆயிரம் (959,21,50,000) ரூபா­வாக இருந்­துள்­ளது.
எனினும் 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான ஜனா­தி­பதி செல­வி­ன­மா­னது 239 கோடியே 20 இலட்­சத்து 75 ஆயிரம் (239,20,75,000) ரூபா­வாக குறைத்து மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.
இருந்­த­போ­திலும் பிர­தமர் அலு­வ­ல­கத்­துக்­கான செல­வி­ன­மா­னது 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்டு சட்­ட­மூ­லத்தில் 48 கோடியே 62 இலட்சம் (48,62,00,000) ரூபா­வாக அதி­க­ரித்து மதிப்­பீ­டப்­பட்­டுள்­ளது.
இதே­நேரம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி காலத்தில் 2014 ஆம் மற்றும் 2015 ஆம் நிதி­யாண்­டு­களில் பிர­தமர் அலு­வ­ல­கத்­துக்­கான செல­வி­னங்­க­ளாக முறையே 30 கோடியே 53 இலட்சம் (30,53,00,000) ரூபாவும் 28 கோடியே 52 இலட்சம் (28,52,00,000) ரூபாவும் மதிப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­தன.

அதேபோல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கீழ்­வரும் தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சின் 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான செல­வி­ன­மாக 1219 கோடியே 23 இலட்­சத்து 50 ஆயிரம் (1,219,23,50,000) ரூபா மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கீழி­ருக்கும் மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்­சுக்கு அடுத்த நிதி­யாண்­டுக்­கான செல­வி­ன­மாக 6949 கோடியே 58 இலட்­சத்து 7 ஆயிரம் (6,949,58,07,000) ரூபா மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்டு சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் அடுத்த நிதி­யாண்டில் ஒவ்­வொரு அமைச்­சுக்­கு­மான செல­வின மதிப்­பீ­டுகள் பின்­வ­ரு­மாறு,
புத்­த­சா­சன அமைச்சு 133,76,65,000 ரூபா, நிதி அமைச்சு 10,783,32,35,000 ரூபா, பாது­காப்பு அமைச்சு 30,665,78,24,000 ரூபா, தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சு 1,219,23,50,000 ரூபா, அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு 293,37,50,000 ரூபா, அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சு 1,258,66,50,000 ரூபா, நீதி அமைச்சு 988,47,60,000 ரூபா, சுகா­தாரம் மற்றும் சுதேச மருத்­துவ அமைச்சு 17,407,79,98,000 ரூபா, வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு 946,92,05,000 ரூபா, போக்­கு­வ­ரத்து அமைச்சு 5953,06,50,000 ரூபா, பல்­க­லைக்­க­ழக கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சு 17,141,98,80,000 ரூபா, கமத்­தொழில் அமைச்சு 5,420,12,12,000 ரூபா, மின்­வலு மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி அமைச்சு 123,74,00,000 ரூபா, மகளிர் மற்றும் சிறுவர் அலு­வல்கள் அமைச்சு 976,61,55,000 ரூபா, உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு 3,263,80,00,000 ரூபா, பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் வெகு­சன ஊடக அமைச்சு 545,44,80,000 ரூபா, வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்சு 282,34,00,000 ரூபா, சமூக வலு­வூட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சு 6,840,08,82,000 ரூபா, கல்வி அமைச்சு 18,597,60,30,000 ரூபா, பொது நிர்­வாக மற்றும் முகா­மைத்­துவ அமைச்சு 15,625,61,25,000 ரூபா, பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்சு 787,87,80,000 ரூபா, விளை­யாட்­டுத்­துறை அமைச்சு 332,11,00,000 ரூபா, மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சு 68,68,00,000 ரூபா, புனர்­வாழ்­வ­ளிப்பு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சு 378,01,30,000 ரூபா, கைத்­தொழில் மற்றும் வாணிப அலு­வல்கள் அமைச்சு 567,51,80,000 ரூபா, பெற்­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சு 28,15,00,000 ரூபா, கடற்­றொழில் மற்றும் நீர்வாழ் வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சு 493,30,45,000 ரூபா, காணி அமைச்சு 780,07,74,000 ரூபா, கிரா­மிய பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சு 480,04,85,000 ரூபா, மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு 23,793,46,42,000 ரூபா, தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்சு 79,08,15,000ரூபா, அரச தொழில் முயற்­சிகள் அபி­வி­ருத்தி அமைச்சு 36,12,30,000 ரூபா, சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்தி மற்றும் கிறிஸ்­தவ சமய அலு­வல்கள் அமைச்சு 16,28,00,000 ரூபா, மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சு 6,949,58,07,000 ரூபா, வலு­வா­தார அபி­வி­ருத்தி மற்றும் வன ஜீவ­ரா­சிகள் அமைச்சு – 314,63,30,000 ரூபா, மாந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சு – 2,227,51,000 ரூபா, உள்­ளக அலு­வல்கள், வடமேல் அபி­வி­ருத்தி மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு- 615,12,28,000 ரூபா, தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சு-11,39,20,000 ரூபா, தேசிய நல்­லி­ணக்க மற்றும் ஒரு­மைப்­பாட்டு அமைச்சு – 10,04,20,000 ரூபா, நக­ரத்­திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் அமைச்சு- 3,197,80,06,000 ரூபா, துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­துறை அலு­வல்கள் அமைச்சு- 69,06,00,000 ரூபா, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு- 103,70,50,000 ரூபா, சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு- 7,692,58,50,000 ரூபா, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு- 707, 56, 20,000 ரூபா, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு-42, 68,00,000 ரூபா, ???? அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு-81,45,55,000 ரூபா, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு-386,85,50,000 ரூபா, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு-1,366,11,30,000 ரூபா, நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சு-2,807,83,25,000, ரூபா, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு 129,42, 40,000 ரூபா.

சபையில் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிப்பு:பாதுகாப்புக்கு 30 ஆயிரத்து 665 கோடி ரூபா.... Reviewed by Author on October 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.