தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த அரசாங்கம்!
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை அரசியல் கைதிகள் எனக் கருதி விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்த சந்தேக நபர்களின் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் நீண்டகாலம் சிறையில் இருக்கும் நபர்களை மாத்திரம் பிணையில் விடுதலை செய்வது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் அரசியல் கைதிகள் எனக் கருதி விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கடுமையாக குரல் கொடுத்து வந்த தேசிய உரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், அவர்களை பிணையில் விடுவிக்கும் தீர்மானித்திற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த அரசாங்கம்!
Reviewed by Author
on
October 31, 2015
Rating:

No comments:
Post a Comment