தேர்தல் ஆணையாளருக்கு சர்வோதய விருது...
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு சர்வோதய விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒப்படைக்கப்பட்ட கடமைகளை பக்கச்சார்பின்றி, எவருக்கும் அடி பணியாது, தைரியமாக மிகவும் பொறுப்புடன் கடமையாற்றியமை ஆகிய காரணிகளின் அடிப்படையில் விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வோதய அமைப்பின் தலைவர் ஏ.ரீ.ஆரியரட்னவின் ஆலோசனைக்கு அமைய சர்வோதய தேசிய விருது வழங்கும் நிகழ்வு இம்முறை 18ம் தடவையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக சபாநாயகர் கரு ஜயசூரிய பங்கேற்றிருந்தார்.
மொரட்டுவை சர்வோதய தலைமையகத்தில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் நாட்டுக்கு ஆற்றப்பட்ட சேவைகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தேவநாயகம் ஈஸ்வரன், பேராசிரியர் சந்திரா குணவர்தன, துசித மலலசேகர, மனிகே சுமனசேகர ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.
சபாநாயகர் கரு ஜயசூரிய, ஏ.ரீ. ஆரியரட்னவிற்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார்.
தேர்தல் ஆணையாளருக்கு சர்வோதய விருது...
Reviewed by Author
on
October 31, 2015
Rating:

No comments:
Post a Comment