மன்னார் மீனவர்கள் பெருங்கடல் தொழிலில் ஈடுபட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
மன்னார் நகர் மீனவர்கள் மீன்பிடிக்காக கடலில் சென்று வரும் கால்வாயை திறந்து விட நடவக்கை எடுக்கும்படி மீனவர்கள், மன்னார் மாவட்ட செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
மன்னாருக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கபட்டவேளை மன்னார் சவுத்பார் பகுதியில் அமைக்கபட்ட புகையிர பாலவேலைகளின் போது மன்னார் மீனவர்கள் பெருங்கடலுக்கு செல்லும் கால்வாய் மணல்களினால் மூடப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பெருங்கடலுக்கு செல்வதில் பாரிய பிரச்சிணைகளுக்கு முகம்கொடுத்து வருகிறனர்.
எனினும் குறித்த மணற்பகுதியை அகழ்வு செய்து பெருங்கடலில் கடற்றொழிலினை மேற்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கையிணை மேற்கொள்ழுமாறு மீனவர்கள் மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரியவின் கவனத்திற்கு மீனவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
இது விடயமாக தெரியவருவதாவது,
பனங்கட்டுகொட்டு, பள்ளிமுனை, பெரியகடை, உப்புக்குளம், சாந்திபுரம், சவுத்பார் ரயல்வே ஸரேசன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300க்கு மேற்பட்ட மீனவர்கள், மன்னார் நகர் பாலக் கடற்கரையோரத்திலிருந்து ஆழ்கடலுக்கு சென்று காலா காலமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மீன்பிடியாளர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கு செல்வதென்றால் கடலில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில்வே பாலத்தை ஊடறுத்தே கால்வாய் ஊடாக தென் கடலுக்குச் செல்ல வேண்டிய நிலை உண்டு.
ஆனால் அண்மையில் இந்த ரயில்வே பாலம் புனரமைக்கப்பட்ட வேளையில் இந்த பாலம் நுழைவாயில்கள் மணலால் மூடப்பட்டதனால் கால்வாய் ஊடாக மீனவர்கள் தங்கள் படகுகளை செலுத்த முடியாத நிலையில் சுமார் நூறு மீற்றர் தூரம் பல பேர் சேர்ந்தே படகுகளை இழுத்துச் சென்று தொழிலுக்கு சென்று வரவேண்டிய நிலையில் இருப்பதாகவும், இந்த கடல் கால்வாயை திறந்து விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி இவ் மீனவர்கள் மன்னார் மாவட்ட செயலாளருக்கு அண்மையில் மகஐர் வழங்கியிருந்தனர்.
இந்த விடயமாக நேற்றையதினம் மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் சம்பந்தப்பட்டோருக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் தீர்க்கமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லையெனவும் மணலால் மூடப்பட்டிருக்கும் ரயில் பாலப்பகுதியை ரயில்வே திணைக்கள அதிகாரிகளே அவற்றை பார்வையிட்டு செயல்படுத்த வேண்டிய நிலையிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கலந்துரையாடல் தீர்வு பெறாத நிலையில் முடிவுற்றதாக தெரிவிக்கபடுகிறது
மன்னார் மீனவர்கள் பெருங்கடல் தொழிலில் ஈடுபட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
October 17, 2015
Rating:

No comments:
Post a Comment