கூட்டமைப்பினர் கைதிகளுடன் நேரில் கலந்துரையாடல்! உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இன்று கைவிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்று மகசின் சிறைச்சாலைக்கு நேரில் விஜயம் செய்து தமிழ் அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அலைபேசி உரையாடலின் போது தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கைதிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதனையடுத்து தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை நவம்பர் 7ம் திகதி வரை தற்காலிகமாக கைவிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கூட்டமைப்பினர் கைதிகளுடன் நேரில் கலந்துரையாடல்! உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!
Reviewed by NEWMANNAR
on
October 17, 2015
Rating:

No comments:
Post a Comment