மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிப்பு.-Photos
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெழிவு படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் இடம் பெற்றது.
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை
அதிகாரி ரி.பூலோகராசா தலைமையில் இடம் பெற்ற குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கணக்கு பதிவாளர் ஐ.சி.ஏ.ஜோண் பொஸ்கோ,மன்னார்,நானாட்டான்,முசலி,மடு,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுத்த மற்றும் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
October 08, 2015
Rating:
No comments:
Post a Comment