விக்னேஸ்வரன் பழுத்த அறிவாளி: யாழில் பா.சிதம்பரம் புகழாரம்...
இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் இன்றைய தினம் யாழ்.கு டாநாட்டுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை அவருடய அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்காக இலங்கை வந்திருந்த பா.சிதம்பரம் இன்றைய தினம் காலை யாழ்.வந்த நிலையில் காலை 11மணியளவில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில், சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சு சுமார் 30 நிமிடங்கள் வரை இடம் பெற்றது. சந்திப்பின் நிறைவில் பா.சிதம்பரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக் கையில், நான் கொழும்பில் நடைபெறும் நிகழ்வு ஒன்றுக்கு வருகை தந்திருந்ததாகவும் இடையில் சற்று நேரம் கிடைத்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் இதனடிப்படையில் யாழ்.வந்துள்ளதுடன் முதலமைச்சரை சந்தித்தும் பேசியுள்ளதாகவும் கூறினார்.
உங்கள் முதலமைசர் பழுத்த அறிவாளி எனவும் அவர்கள் சில வி டயங்களில் மிக நிதானமாகவும், அவதானத்துடனும் பேசுகின்றார்.
இந்நிலையில் தற்போது உண்டாகியிருக்கும் அமைதியான நிலையினைகருத்தில் எடுத்துக் கொண்டு இந்த மக்களுக்கு எம்மால் என்ன உதவிகளைச் செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் நாங்கள் செய்வோம். என தெரிவித்தார்.
விக்னேஸ்வரன் பழுத்த அறிவாளி: யாழில் பா.சிதம்பரம் புகழாரம்...
Reviewed by Author
on
October 22, 2015
Rating:

No comments:
Post a Comment