வித்தியா - சேயா கொலையாளிகளுக்கு ‘மரணதண்டனை’ வழங்கக்கோரும் பாதயாத்திரை : வவுனியாவை வந்தடைந்தது....
மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி இலங்கை போக்குவரத்துசபையினரின் நடத்தி வரும் பாத யாத்திரை வவுனியாவை வந்தடைந்தபோது, அதனை வரவேற்று, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டார்.
இக்கடினமான நீண்டதூர பாதயாத்திரையை முன்னெடுத்துவரும் இலங்கை போக்குவரத்துசபையை சேர்ந்தவர்களைப் பாராட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இந்தப் பாதயாத்திரைக்கு அனைவரும் தம்மாலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திங்களன்று காலை யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை செவ்வாய்க்கிழமை மாலை வவுனியாவை வந்தடைந்தது. இன்று புதன்கிழமை காலை அது வவுனியாவில் இருந்து தனது கொழும்புக்கான யாத்திரையை ஆரம்பித்தது.
இலங்கை போக்குவரத்துச் சபையின், கொழும்பு பிரதான செயலாற்று அத்தியட்சகரும், யாழ். பிராந்திய முகாமையாளருமான உபாலி கிரிவத்துடுவவின் தலைமையிலான இந்தப் பாதயாத்திரையில், யாழ். பிராந்திய செயலாற்று பிரதான முகாமையாளர் கேதீஸ்வரன், பிரதான நிதி முகாமையாளர் அழகேசன், சாலை முகாமையாளர் குணபாலசெல்வம், வடமாகாண சாலை முகாமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வித்தியா - சேயா கொலையாளிகளுக்கு ‘மரணதண்டனை’ வழங்கக்கோரும் பாதயாத்திரை : வவுனியாவை வந்தடைந்தது....
Reviewed by Author
on
October 07, 2015
Rating:

No comments:
Post a Comment