மார்பை சூடுவைத்து அழுத்தி தட்டையாக்கும் கொடூர செயன்முறையால் 3.8 மில்லியன் பெண்கள் பாதிப்பு...
சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவதையும் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதையும் தடுக்க அவர்களது மார்புப் பகுதியை சூடுவைத்து தட்டையாக்கி உருக்குலைக்கும் கொடூர செயன்முறையால் உலகெங்கும் 3.8 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையொன்று கூறுகிறது.
நிலக்கரித் தணலுக்கு மேலாக வைத்து சூடேற்றப்பட்ட பாரிய கற்கள் மற்றும் சுத்தியல் என்பவற்றைப் பயன்படுத்தி மார்பு இழையங்களை அழுத்தி உருக்குலைத்து சிறுமிகளது பாலியல் ரீதியான கவர்ச்சித் தோற்றம் குறைக்கப்படுகிறது.
மேற்படி கொடூர செயன்முறை கமெரூன், நைஜீரியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடுபவர்களில் 58 சதவீதத்தினராக சிறுமிகளின் தாய்மாரே உள்ளனர்.
கமெரூனிலுள்ள செல்வந்தக் குடும்பங்கள் இளம் சிறுமிகளை மார்புப் பகுதியில் இறுக்கமான பட்டியொன்றை அணிய நிர்ப்பந்தித்து அவர்களது மார்பக வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.
மார்பை சூடுவைத்து அழுத்தி தட்டையாக்கும் கொடூர செயன்முறையால் 3.8 மில்லியன் பெண்கள் பாதிப்பு...
Reviewed by Author
on
October 16, 2015
Rating:

No comments:
Post a Comment