உண்ணாவிரதம் இருக்கும் 8 அரசியல் கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு மெகசின் சிறையில் விடுதலை கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் 8 பேர் இன்று மாலை வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுகவீனமடைந்த நிலையிலேயே இவர்கள் 8 பேரும் வைத்தியமனைவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அநுரதபுர சிறைச்சாலையிலும் பதுளையை சேர்ந்த ஒருவர் சுகவீனமடைந்து வைத்தியமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் இன்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
ஊர்களில் இருக்கும் தமது பெற்றோர், கவலைப்படுவார்கள் என்ற காரணத்தினால் இந்த 8 பேரினதும் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம் இருக்கும் 8 அரசியல் கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by NEWMANNAR
on
October 15, 2015
Rating:

No comments:
Post a Comment