எனது குழந்தைகள் வெவ்வேறு குணம் படைத்தவர்கள்: இளவரசர் வில்லியம்
பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது இரண்டு குழந்தைகளின் குணாதிசயங்கள் குறித்து கல்லூரி விழா ஒன்றில் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரியில், நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக இளவரசர் வில்லியம் கலந்துகொண்டார்.
இதில் அவர் பேசுகையில், தற்போது, உங்கள் முன்னிலையில் நின்று பேசுவதில் பெருமைப்படுகிறேன்.
நான் இந்த கல்லூரியில் விவசாயம் தொடர்பான பாடத்திட்டத்தை 12 வாரங்கள் பயின்றுள்ளேன், அது எனது எதிர்காலத்தில் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சிறுவயதில், எனது தேவைகளை உணர்ந்துகொண்ட தாயார், அவை நிறைவேறுதற்காக எனக்கு உதவியாக இருந்துள்ளார்.
மேலும், எனது இரு குழந்தைகளும் எனது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கின்றனர் என்று கூறிய வில்லியம், எனது 5 மாத பெண் குழந்தையான சார்லோட், பெண்களுக்கே உரித்தான குணாதிசயங்களோடு இருக்கிறார்.
ஆனால், எனது மகன் ஜார்ஜ் மிகவும் கலகலப்பானவன் என்று கூறியுள்ளார். தற்போது வில்லியம், விமான அவசர ஊர்திப்பிரிவில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனது குழந்தைகள் வெவ்வேறு குணம் படைத்தவர்கள்: இளவரசர் வில்லியம்
Reviewed by Author
on
October 16, 2015
Rating:

No comments:
Post a Comment