அண்மைய செய்திகள்

recent
-

2ம் இணைப்பு -மன்னார் இலுப்பைக்கடவை பயணிகள் தரிப்பிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு.Photos

2ம் இணைப்பு 

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை பிரதான வீதியில் அமைந்துள்ள பயணிகள் தரிப்பிடத்தினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை இலுப்பைக்கடவை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை(16) காலை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் இலுப்பைக்கடவை கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ராசதுரை நாகேஸ்வரன் (வயது-47) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

-குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை(15) இரவு 11 மணியளவில் குறித்த பயணிகள் தரிப்பிடத்தினுள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

-உடனடியாக குடும்பத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தெரியப்படுத்திய நிலையில் இலுப்பைக்கடவை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.

-இதன் போது குறித்த குடும்பஸ்தர் குற்றம் ஒன்றின் காரணமாக ஏற்கனவே சிறைத்தண்டனையினை பெற்று விடுதலை பெற்று வந்தவர் என தெரிய வந்துள்ளது.

-இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த குடும்பஸ்தரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் தடவியல் நிபுணத்துவ பொலிஸார் அழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சம்பவ இடத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை மாலை சென்ற திடீர் மரண விசாரனை அதிகாரி குறித்த சடலத்தை பார்வையிட்டதோடு சடலப்பரிசோதனைக்காக சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

-மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








மாந்தை மேற்கு பிரதேச செயலப் பிரிவிற்குட்பட்ட இலுப்பைகடவையை சேர்ந்த ஒருவர் மர்மமான முறையில் இறப்பு - Photos

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலப் பிரிவிற்குட்பட்ட இலுப்பை கடவையை சேர்ந்த இராசதுரை நாகேஸ்வரன் (மாமா ) எனப்படும் நபர் நேற்று இரவு 15.10.2015 இலுப்பைகடவை பயணிகள் தரிப்பிடத்தினுள் மர்மமான முறையில் இறந்துள்ளார். இறந்த நிலையில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இறப்பு 

இவரது இறப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.மேலதிக விசாரணையினை இலுப்பை கடவை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .










2ம் இணைப்பு -மன்னார் இலுப்பைக்கடவை பயணிகள் தரிப்பிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு.Photos Reviewed by NEWMANNAR on October 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.