இனங்களுக்கிடையே அமைதியையும்,நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முகமாக பொதுமன்னிப்பை அரசியல் கைதிகளுக்கு வழங்க முடியும்-குரு முதல்வர் விக்டர் சோசை
ஜனாதிபதியின் கோரிக்கையினை ஏற்று உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிட்டுள்ள அரசியல் கைதிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று(17) சனிக்கிழமை மாலை சென்ற மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் சென்று அரசியல் கைதிகளுக்கு பால்,பழம் மற்றும் உணவுப்பொருட்களை வழங்கி உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதன் பின் அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
-ஜனாதிபதியின் கோரிக்கையினை ஏற்று அரசியல் கைதிகள் தமது சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர்.அவர்களுடைய கோரிக்கையாக இத்தோடு அவர்களின் உண்ணாவிரதம் நிறைவடைந்தாலும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக அதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்பு நல்ல முடிவு கிiடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
-அந்த முடிவை எட்டுவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக மதத்தலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,சமூக சிவில் அமைப்புக்கள் ஆகியவை இணைந்து ஜனாதிபதி நல்ல முடிவெடுப்பதற்காக எஞ்சியுள்ள நாற்களில் அழுத்தத்தை கொடுத்து உண்மையான விடுதலையை குறிப்பாக பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொது மன்னிப்பை பொறுத்தவரை ஜனாதிபதியினால் வழங்க முடியும்.எத்தனையோ நாடுகளில் இவை நடந்திருக்கின்றன.
இனங்களுக்கிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முகமாக பொதுமன்னிப்பை அவர்கள் வழங்கலாம் என்பது எங்களுடைய என்னமாக இருக்கின்றது.
ஆகவே உண்ணாவிரதத்ததை அவர்கள் கைவிட்டதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்.
-அவர்கள் மனதிலே துணிவாக இருந்தாலும் உடல் அளவிலே அவர்கள் பாதீக்கப்பட்டு இருந்தார்கள்.
இருந்தும் அவர்களுடைய கோரிக்கையை நாங்கள் அனைவரும் ஏற்று அவர்களின் விடுதலை தொடர்பில் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என இவ்வேளையிலே கூறி நிற்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இனங்களுக்கிடையே அமைதியையும்,நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முகமாக பொதுமன்னிப்பை அரசியல் கைதிகளுக்கு வழங்க முடியும்-குரு முதல்வர் விக்டர் சோசை
Reviewed by NEWMANNAR
on
October 18, 2015
Rating:
No comments:
Post a Comment