வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு....
வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக டபிள்யு .எப்.யு. பெர்னாண்டோ மிகவும் அமைதியான முறையில் தனது கடமைகளை இன்று புதன் கிழமை காலை பொறுப் பேற்றுக்கொண்டார்.
வட மாகாணத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய லயனல் ஜெயசிங்கா கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அவரது இடத்திற்கு புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யு .எப்.யு. பெர்னாண்டோ தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இன்று காலையில் பலாலிக்கு விமானத்தில் வந்த இவரை யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் அத்தியட்சகர்கள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோர் காங்கேசன்துறையில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திறக்கு அழைத்து வந்தார்கள்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் மங்கள விளக்கேற்றி வைத்து தனது கடமைகளை ஆரம்பித்த பொலிஸ்மா அதிபர், ஊடகவியலாளர்களை தமிழ் மொழியில் வரவேற்று கலந்துரையாடியதுடன் வெகு விரைவில் சந்தித்து கலந்துரையாடுவதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு....
Reviewed by Author
on
October 14, 2015
Rating:

No comments:
Post a Comment