அண்மைய செய்திகள்

recent
-

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் உயிரிழப்பு...


நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா  தனது 13 ஆவது வயதில் மூளைக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

விவேக்கின் மகன் பிரசன்னாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் சென்னை எஸ்.ஆர்.எம் . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நோய் குறித்து மருத்துவர்களால் ஆரம்பத்தில் கண்டறிய முடியவில்லை. பின்னர்தான் மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதற்குள் பிரசன்னா, உடல்நிலை மோசமாகி, கோமா நிலைக்குப் போய்விட்டார். அதனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காத நிலையில் மிக இளம் வயதில் உயிரிழந்தார் பிரசன்னா.

விவேக்கின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு மகன் பிரசன்னாவின் உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் உயிரிழப்பு... Reviewed by Author on October 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.