முழங்காவில் பகுதியில் 25 கிலோ கேரளா கஞ்சா மீட்பு.-Photos
முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லவராயன் கட்டு கிராமப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகுதி கேரளா கஞ்சாவினை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முழங்காவில் பொலிஸார் மீட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.
வீடொன்றில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று மாலை முழங்காவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.ஜே.ஆரிய வன்ச தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று தேடுதல்களை மேற்கொண்ட போது ஒரு தொகுதி கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டது.
குறித்த கஞ்சா கேரளா கஞ்சா எனவும், 25 கிலோ கிராம் எடை கொண்டது எனவும் முழங்காவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு முழங்காவில் குமுழமுனை மற்றும் சோலை நிலா பல்லவராயன் கட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த கஞ்சா கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து இந்திய மீனவர்களினால் கொண்டு வரப்பட்டதோடு தம்மிடம் விற்பனைக்காக தந்ததாக குறித்த சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முழங்காவில் பகுதியில் 25 கிலோ கேரளா கஞ்சா மீட்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
October 19, 2015
Rating:

No comments:
Post a Comment