சம்பந்தன் மகசின் அரசியல் கைதிகளுடன் சந்திப்பு: உண்ணாவிரதம் தற்காலிமாக இடைநிறுத்தம் : கைதிகளால் கடிதமும் வழங்கி வைப்பு....
எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த கொழும்பு மகசின் சிறைசாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை சற்றுமுன்னர் சந்தித்த பின்னர் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.
நீண்டகாலமாக விசாரணைகளின்றி நாடாளவிய ரீதியில் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 217பேர் நல்லாட்சி அரசாங்கம் தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை அளிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் இன்று ஆறாவது நாளாகவும் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்த தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளனர்.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விவகாரத்திற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக நிரந்தர தீர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு அறிவித்துள்ளதாகவும் எனவே தமது உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சம்பந்தன் கோரியதாகவும்; இதனையடுத்தே தாம் உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும் கைதிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தமது வழங்கிய வாக்குறுதி படி விடுதலை வழங்காவிட்டால் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்போம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு கடிதமொன்றை தமிழ் அரசியல் கைதிகள் வழங்கியுள்ளனர்.
சம்பந்தன் மகசின் அரசியல் கைதிகளுடன் சந்திப்பு: உண்ணாவிரதம் தற்காலிமாக இடைநிறுத்தம் : கைதிகளால் கடிதமும் வழங்கி வைப்பு....
Reviewed by Author
on
October 18, 2015
Rating:

No comments:
Post a Comment