புதிய முறைமையில் உள்ளூராட்சித் தேர்தல்கள்...
உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் புதிய முறைமையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுவருகின்றன. அதாவது 70 வீத தொகுதி வாரி மற்றும் 30 வீத விகிதாசார முறைமையைக்கொண்ட புதிய தேர்தல் முறையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியா ளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையா ற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகை யில்,
உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் அடுத்தவருடம் மார்ச் மாதம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. உள்ளூராட்சிமன்றத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையில் நடத்தவே எதி ர்பார்க்கின்றோம். அதனை தாமதப்படுத்த நாங்கள் விரும்பவில்லை.
அதாவது 70 வீத தொகுதி வாரி மற்றும் 30 வீத விகிதாசார முறைமையைக்கொண்ட புதிய தேர்தல் முறையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறும்.
ஆனால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எல்லை மீள் நிர்ணயம் தொட ர்பில் சிக்கல்கள் உள்ளன. கடந்த காலங்களில் முன்னைய ஆட்சியாளர்களுக்கு தேவையான வகையில் எல்லை மீள் நிர்ணயங்கள் செய்யப்பட்டுள்ளன.
அவற்றை விரைவில் மறுசீரமைத்து எதிர் வரும் மார்ச் மாதமளவில் தேர்தலை நடத்து வதே எமது நோக்கமாகும். அதற்கான ஏற்பா டுகளை மேற்கொண்டுவருகின்றோம். தேவை எனின் இரண்டு மாதங்கள் அளவில் தாமதம் ஏற்படலாம் என்றார்.
புதிய முறைமையில் உள்ளூராட்சித் தேர்தல்கள்...
Reviewed by Author
on
October 18, 2015
Rating:

No comments:
Post a Comment