மன்னார்த் தமிழ்ச்சங்கத்தின் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி
அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்சியடைகிறோம்.
இந்த பொன்னான வேளையில் மறைந்த ஆபிரகாம் இலிங்கன் அவர்கள் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய மடலிலை இங்கு பிரசுரிக்க விரும்புகிறோம். உலகப் புகழ்பெற்ற இம்மடல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையிலான உறவை வளர்க்க உதவும் எaன நம்புகின்றோம் நன்றி.
வணக்கம்!
அவன் கற்றுக் கொள்ள வேண்டும்
அனைத்து மனிதர்களும் நேர்மையானவர்கள் அல்ல
அனைத்து மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல
என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும்
மனிதர்களில் அயோக்கியர்களுக்கு இடையில்
உண்மையான கதாநாயகர்களும் இருக்கிறார்கள்
என்பதையும்
சுயநல அரசியல்வாதிகளுக்கு இடையில்
அர்ப்பணிப்பு மிக்க தலைவகளும் இருக்கிறார்கள்
என்பதையும்
பகைவர்களுக்கு இடையில்
நண்பர்களும் இருக்கிறார்கள்
என்பதையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
அவனுக்கு பொறாமைக் கணம் வந்துவிடாமல்
கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்
மௌனமாக இரசித்து சிரிப்பதன் இரகசியத்தை
அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்
எதற்கெடுத்தாலும் பயந்து சுருங்கிக் கொள்வது
கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை
அவனுக்கு திறந்த காட்டுங்கள்.
அதே வேளையில் இயற்கையின் அதிசயத்தை
இரசிக்கவும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
வானில் பறக்கும் பறவைகளின் புதிர்மிகுந்த அழகையும்,
சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும்,
பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும்,
இரசிப்பதற்கும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது
என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும்
தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத
நம்பிக்கை வைக்க
அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும்
முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும்
அணுகுவதற்கு அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.
கும்பலோடு கும்பலாக கரைந்து போய் விடாமல்
எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி
சுயமாகச் செயல்படும் தைரியத்தைக் கற்றுக் கொடுங்கள்.
அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும்.
எனினும் உண்மை என்னும் திரையில் வடிகட்டி
நல்லவற்றை மட்டும் பிரித்து எடுக்க
அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று
அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும்
அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும்
வெற்றுப் புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும்
அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தனது செயற்திறனுக்கும் அறிவாற்றலுக்கும்
மிக அதிக ஊதியம் கோரும் சாமர்த்தியம் அவனுக்கு வேண்டும்.
ஆனால்,
தனது இதயத்திற்கும் தனது ஆன்மாவிற்கும்
விலைபேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது
பெருங்கும்பல் திரண்டுவந்து கூச்சலிட்டாலும்
நியாயம் என்று நான் நினைப்பதை நிலைநாட்ட
விடாமல் போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொடுங்கள்.
அவனை அன்பாக நடத்துங்கள்.
ஆனால் அதிக செல்லம்காட்டி சார்ந்திருக்க வைக்க வேண்டாம்.
ஏனென்றால் கடுமையான தீயில் காட்டப்படும் இரும்பு மட்டும்தான்
பயன் மிக்கதாக மாறுகின்றது.
தவறுகண்டால் கொதித்து எழும் துணிச்சலை
அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
அதே வேளையில் தனது வலிமையை மௌனமாக
வெளிப்படுத்தம் பொறுமையை அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
அவன் தன்மீதே மகத்தான நம்பிக்கை கொள்வான்.
இது ஒரு மிகப்பெரிய பட்டியல் தான்.
இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம்
கற்றுக்கொடுங்கள்
அவன் மிக நல்லவன்.
என் அன்பு மகன்.
நமது ஆசிரியர்களும் இது போன்று எமது பிள்ளைகளை வழி நடத்த வேண்டும் என்பதற்காகவே.
நன்றி.
வாழ்த்துகளைத் தெரிவித்து நிற்போர்...
தமிழ்பணியில்,
தமிழ்ச்சுடர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார சர்மா
தலைவர்,
மன்னார்த் தமிழ்ச்சங்கம்.
மற்றும்
திரு. மன்னார் அமுதன் (பொதுச்செயலாளர்)
திரு எஸ். ஷதீஸ் (நிதிச்செயலாளர்)
அனைத்து நிர்வாக சபை, பொதுச்சபை உறுப்பினர்கள்.
மன்னார்த் தமிழ்ச்சங்கத்தின் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி
Reviewed by NEWMANNAR
on
October 06, 2015
Rating:

No comments:
Post a Comment