அண்மைய செய்திகள்

recent
-

தமிழினியின் புகழுடல் பரந்தனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!

புற்றுநோயால் உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினியின் உடலம் பரந்தனில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழினி என்று அழைக்கப்படும் சிவகாமி சிவசுப்பிரமணியமம் இன்று ஞாயிறு அதிகாலை புற்றுநோயால் மகரகம வைத்தியசாலையில் காலமானார்.

கிளிநொச்சி பரந்தனை சொந்த இடமாகக் கொண்ட தமிழினிக்கு இறக்கும்போது 43 வயது. ஆகும்.

கடந்த 1991 ஆம் ஆண்டு 19 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த தமிழினி பின்னர் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக உயர்ந்தார்.

அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்தபோது தமிழினி கைது செய்யப்பட்டார்.

நீண்டகாலமாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண்களுக்கான பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழினி, பின்னர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான இவர் அரசியலில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவரை தேர்தலில் போட்டியிடச் செய்வதற்காக அரச தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக அப்போது பரவலாக பேசப்பட்டது.

ஆனால், தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அமைதியான முறையில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப் போவதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.


சிறையிலிருந்து விடுதலையான பின்னர் விடுதலைப் போராட்ட வரலாறு பற்றியும் அதன் துயரங்கள் பற்றியும் நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார்.

திருமணம் முடித்து வெளிச் சமூகத் தொடர்புகள் எதுவுமின்றி அமைதியான முறையில் தமிழினி வாழ்ந்து வந்த அவருக்கு புற்றுநோய் ஏற்பட்ட தகவல்கூட வெளியில் வரவில்லை.

அவரது உடல் அவரது கணவரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. கிளிநொச்சி பரந்தனில் உள்ள அவரின் இல்லத்திற்கு உடலம் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகளும் அஞ்சலி கூட்டமும் நாளை அல்லது நாளைமறுதினம் பரந்தன் சிவபுரத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற உள்ளது.


தமிழினியின் புகழுடல் பரந்தனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது! Reviewed by NEWMANNAR on October 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.