அண்மைய செய்திகள்

recent
-

உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் ஒரு நிமிடம் தமிழினிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!- பா. டெனிஸ்வரன்

உலகெங்கிலும் இருக்கின்ற எமது உறவுகள் அனைவரும் ஒரு நிமிடம் தமிழினியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள் என வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா. டெனிஸ்வரன் கோரியுள்ளார்
இன்றைய தினம் இவ்வுலக வாழ்வை முடித்து இறைவனடி சேர்ந்த தமிழினி என்று அழைக்கப்படுகின்ற சுப்பிரமணியம் சிவகாமியின் இறப்பு செய்தியினை தெரியப்படுத்திய உறவுகள் அனைவருக்கும் மற்றும் அன்னாரின் பூதவுடலை உடனடியாக விடுவித்து கொடுக்க உதவிய வைத்தியசாலை வட்டாரங்களுக்கும் முதற்கண் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.

அத்துடன் அன்னாரின் பிரிவால் துயரடைந்துள்ள தமிழினியின் குடும்பத்தார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து நிற்கின்றேன்.

மேலும் அன்னாரின் பூதவுடல் இன்றைய தினம் 18.10.2015 அன்று மகரகம வைத்தியசாலையில் இருந்து அன்னாரது ஊராகிய 8ம் ஒழுங்கை, சிவபுரம் குடியிருப்பு, பரந்தனில் இருக்கின்ற அவரது வீட்டிற்கு எடுத்துவரப்பட இருக்கின்றது.

எனவே உலகெங்கிலும் இருக்கின்ற எமது உறவுகள் அனைவரும் ஒரு நிமிடம் தமிழினியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள். அத்தோடு எமது பகுதியில் இருக்கின்றவர்கள் முடியுமானால் நாளை 19.10.2015 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருக்கும்; அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பா. டெனிஸ்வரன் கோரியுள்ளார்
உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் ஒரு நிமிடம் தமிழினிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!- பா. டெனிஸ்வரன் Reviewed by NEWMANNAR on October 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.