எயிட்ஸ் நோய் விழிப்புணர்வுக்காக பழங்கால கார்கள் கொழும்பில் பேரணி...
எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொழும்பில் ஆங்கிலேயர் காலத்து பீட்டில் கார்களின் பேரணியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் பிரதிவருடமும் டிசம்பர் முதலாம் திகதி அனுட்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கை எயிட்ஸ் நோய் விழிப்புணர்வுக்கான அமைப்பு பழங்கால கார்களின் பேரணியொன்றை கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது.
எயிட்ஸ்நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் தாங்கிய பீட்டில் ரக கார்களைக் கொண்ட பேரணியொன்று கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் பவனி வருவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம்பொதுமக்களிடையே எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் கொழும்பு காலிமுகத்திடலில் ஐக்கிய நாடுகள் எயிட்ஸ் விழிப்புணர்வு அமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
எயிட்ஸ் நோய் விழிப்புணர்வுக்காக பழங்கால கார்கள் கொழும்பில் பேரணி...
Reviewed by Author
on
October 24, 2015
Rating:

No comments:
Post a Comment