அண்மைய செய்திகள்

recent
-

வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்! மன்னார் மாவட்ட சாதனை மாணவர்கள்-Photos

இவ்வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய  பாடசாலையை மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் முதலாம் இடத்தையும்,மேலும் ஒரு மாணவன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஐ.எரிக்கிறேஸ்மன் (183) புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளதோடு அதே பாடசாலையைச் சேர்ந்த  ஜே.ரெற்றஸ் அனோன்(183) புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

அதே வேளை குறித்த பாடசாலையைச் சேர்ந்த என்.அபிசேக் (182) புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.

குறித்த மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளின் தமக்கு பல்வேறு வகைகளிலும் உதவிய பாடசாலை அதிபர்,பிரதி அதிபர்,வகுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளதோடு,தமது எதிர்கால இலட்சியமாக வைத்தியராக வந்து இந்த மன்னார் மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


புலமை பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மன்னார் மாவட்ட மாணவர்களுக்கும்,கற்பித்த ஆசிரியர்களுக்கும்  மன்னார் இணையத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.





வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்! மன்னார் மாவட்ட சாதனை மாணவர்கள்-Photos Reviewed by NEWMANNAR on October 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.