முற்றுமுழுதாக கார்ட்போர்ட்டால் உருவாக்கப்பட்ட ஆடம்பர கார்....
ஆடம்பர கார்களை உற்பத்தி செய்யும் ஜப்பானிய லெக்ஸஸ் நிறுவனமானது முற்றுமுழுதாக கார்ட்போர்ட்டால் ( கடினமான மட்டை) உருவாக்கப்பட்ட காரொன்றை தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்படி நிறுவனம் தனது ஆடம்பர கார்களுக்கான பிரசார நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இந்தக் காரை உருவாக்கியுள்ளது.
இந்தக் காரின் மேற்பரப்பு, செயற்படும் கதவுகள், முகப்பு விளக்குகள், சக்கரங்கள் அனைத்துமே கார்ட்போர்ட்டால் உருவாக்கப்பட்டுள்ளன.
இது உலகில் கார்ட்போர்ட் மட்டையால் உருவாக்கப்பட்டுள்ள செயற்படும் முதலாவது கார் என்ற பெயரைப் பெறுகிறது.
அதேசமயம் இந்தக் காரில் உருக்கு மற்றும் அலுமினிய கட்டமைப்பில் மின் மோட்டார் உபகரணமொன்று பொருத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் காரை மழைக் காலத்தில் வீதிகளில் செலுத்திச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
முற்றுமுழுதாக கார்ட்போர்ட்டால் உருவாக்கப்பட்ட ஆடம்பர கார்....
Reviewed by Author
on
October 07, 2015
Rating:

No comments:
Post a Comment