அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம்:


நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம்:


நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது

இதனை அடுத்து குறித்த செய்தி கிராமத்தில் பரவியதால் இன்று வியாழக்கிழமை பரப்பாங்கண்டல் கிராமம் பரபரப்பாகியது.

நேற்றுமாலை 3:30 மணியளவில் குறித்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில் உள்ள அருட்சகோதரி ஒருவர் குறித்த நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறியுள்ளதை அவதானித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த அருட்சகோதரி விடயம் தொடர்பாக பரப்பாங்கண்டல் பங்கு தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இரத்தமும் சதையுமாக மாறிய நற்கருணை தற்பொழுது பங்கு தந்தையின் வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் பொது மக்களுக்கு தெரிந்ததை அடுத்து இன்று வியாழக்கிழமை மாலை மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அப்பகுதிக்கு சென்று இரத்தமும் சதையுமாக மாறிய நற்கருணையை பார்வையிட்டு பயபக்தியோடு வழிபடுபதை காணக்கூடியதாக உள்ளது.

நற்கருணை மாற்றம் பெற்று இரத்தமும் சதையுமாக மாறி மனிதனின் இதயம் போலவும் அதற்கு அருகில் குழந்தையின் உருவம் போலவும், மேலும் அன்னை மரியாவின் உருவம் போலவும் காட்சியளிப்பதை காணக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.





மன்னாரில் நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம்: Reviewed by Author on October 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.