12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகம்...
12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டை ஒன்பது இலக்கங்களையும் �V� அல்லது �X� என்ற ஆங்கில எழுத்துடனும் கொண்டமைந்ததாக காணப்படுகின்றது.
ஆங்கில எழுத்துக்களை நீக்கிவிட்டு 12 தொடர் இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை ஒன்றை ஆட்பதிவு திணைக்களம் அறிமுகம் செய்ய உள்ளது.
1968ம் ஆண்டு 32ம் இலக்க ஆட்பதிவு திணைக்கள சட்ட மூலத்தின் அடிப்படையில் இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட உள்ளது.
கணித சூத்திரம் ஒன்றின் அடிப்படையில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு இலக்கம் வழங்கப்படுகின்றது.
இந்த கணித சூத்திரத்தை தொடர்ந்தும் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் புதிய இலக்க முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலத்திரனியல் அடையாள அட்டை ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகம்...
Reviewed by Author
on
November 10, 2015
Rating:
Reviewed by Author
on
November 10, 2015
Rating:


No comments:
Post a Comment