மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 545 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு...
கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள கடும் மழையின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கி இருந்த சுமார் 545 குடும்பங்களுக்கு வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இன்று உலர் உணவுப் பொதிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு,
சுமார் 13 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவுகளைப் பெற்றுக்கொண்ட 545 குடும்பங்களைச் சேர்ந்த 2019 பேரூக்கு குறித்த உலர் உணவுப் பொதி வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த உலர் உணவுகள் வழங்கும் நிகழ்வில்,
வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மன்னார் பிரதேச செயலக நிர்வாக அலுவலகர் ராதா பெணான்டோ மற்றும் கிராம அலுவலகர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.
ஒரு குடும்பத்திற்கு 1099 ரூபாய் பெறுமதியுடைய உலர் உணவுப்பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 545 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு...
Reviewed by Author
on
November 20, 2015
Rating:
No comments:
Post a Comment