மட்டு.மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கை பாரிய அழிவு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கொக்கடிச்சோலை பிரதேசத்தில் நெடியமடு கண்ட விவசாய பிரதேசத்தில் பல வாய்க்கால்கள் உடைப்பெடுத்தமையால் பெருமளவிலான வயல்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் பெரும் போக நெற்செய்கைக்கென விதைக்கப்பட்ட பெருமளவு வயல்நிலங்கள் அழிவாடைந்துள்ளதுடன் விதைப்பதற்கென தயார் நிலையிலிருந்த நிலங்களும் நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வாய்க்கால்கள் திடீரென உடைப்பெடுத்தமையால் பாரியளவிலான வெள்ளநீர் வயல் நிலங்களுக்குள் பாய்ந்து பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வடிகால்களை நீர்ப்பாசன திணைக்களம் சீரமைத்து தராவிட்டால் பருவ மழை ஆரம்பிக்கும்போது முற்றாக வயல்நிலங்கள் அழிவடைந்து விடுமென விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டு.மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கை பாரிய அழிவு...
Reviewed by Author
on
November 04, 2015
Rating:

No comments:
Post a Comment