அண்மைய செய்திகள்

recent
-

கசாப்புக்கடைகாரராக ஆசைப்பட்டேன்: சிறுவயது கனவுகளை வெளிப்படுத்திய போப் பிரான்சிஸ்....


கத்தோலிக்க திருச்சபைக்கு போப் ஆகுவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப்பாக உள்ளவர் பிரான்சிஸ்.

தனது சமாதான நடவடிக்கைகள் மூலமாக உலக மக்கள் அனைவராலும் மதிக்கப்படுபவர்.

இந்நிலையில், தான் சிறுவயதில் கசாப்புக்கடைக்காரர் ஆகவே ஆசைப்பட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டச் பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்து  கூறியுள்ளதாவது, சிறு வயதில் எனது தாய் மற்றும் பாட்டியுடன் மார்க்கெட் பகுதிக்கு அடிக்கடி செல்வேன்.

அப்போது அங்குள்ள காசப்புக்கடைக்காரரை பார்த்து பிரமித்துள்ளேன்.

எனவே எதிர்காலத்தில் கசாப்புக்கடைக்காரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஆனால் கத்தோலிக்க திருச்சபைக்கு போப் ஆகுவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை.

தற்போது நான் பிரபலமாக இருப்பது குறித்து பெருமைப்பட்டதில்லை.

இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து யாரும் என்னை அடையாளம் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்  என்று தெரிவித்துள்ளார்.


கசாப்புக்கடைகாரராக ஆசைப்பட்டேன்: சிறுவயது கனவுகளை வெளிப்படுத்திய போப் பிரான்சிஸ்.... Reviewed by Author on November 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.