அண்மைய செய்திகள்

recent
-

யாழில் அடைமழை! இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு...


யாழ்.மாவட்டத்தில் 3வது நாளாக இன்றைய தினமும் கனமழை பெய்திருக்கும் நிலையில் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பினால் இடம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில் நாளையும் மழை பெய்தால் பாதிப்பு அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் தொடக்கம் யாழ்.மாவட்டத்தில் கனமழை பெய்து வருக்கின்றது.

இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ள நி லையில் தாழ்நிலப்பகுதி மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றய தினமே அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் இன்றைய தினம் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் 14 பிரதேச செயலர் பிரிவுகளில் மழையினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக அதிகளவு பாதிப்பினை சாவகச்சேரி பகுதி மக்கள் சந்தித்திருக்கின்றனர். குறிப்பாக சாவகச்செரி பகுதியில் 1254 குடும்பங்களை சேர்ந்த 4759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மொத்தமாக மாவட்டத்தில் 8785 குடும்பங்களை சேர்ந்த 3315 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  33 வீடுகள் மாவட்டத்தில் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 502 வீடுகள் பகுதியளில் சேதமடைந்திருக்கின்றன.  இந்நிலையில் இடம்பெயர்ந்த மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன்,

அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனர்த்த முகாமைத்து வப்பிரிவினால் வழங்கப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் கோணப்புலம், மற்றும் நீதவான் முகாம் ஆகியவற்றில் அதிகளவான மக்கள் வெள்ளத்தினால் பாதிக்க ப்பட்டிருக்கின்றனர்.

இதன்படி கோணப்புலம் முகாமில் 227 குடும்பங்க ளைச் சேர்ந்த 777 பேரும், நீதவான் முகாமில் 59 குடும்பங்களை சேர்ந்த 210 பேரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.




யாழில் அடைமழை! இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு... Reviewed by Author on November 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.