அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது-(படங்கள் இணைப்பு)2ம் இணைப்பு

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் தீவு மற்றும் பெருநிலப்பரப்பில் உள்ள பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

இன்று (15) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது.
இதனால் மாவட்டத்தின் பல கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

மன்னார்-யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியின் பாலியாற்று பகுதியில் உள்ள பாலத்தை மேவி சுமார் 5 அடிக்கு மேலாக வெள்ள நீர் பெறுக்கெடுத்து ஓடுவதினால் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தை கடக்க மக்கள் உழவு இயந்திரத்தை பயண்படுத்தி வருகின்றனர்.

வெள்ளங்குளம் பகுதியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதீக்கப்பட்ட நிலையில் அங்குள்ள கோவில் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதே வேளை பாலியாறு பெறுக்கொடுத்துள்ளமையினால் பாலியாற்று பகுதியில் வாழ்ந்து வரும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதீக்கப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

-இதே வேளை சிலாபத்துறை-புத்தளம் பிரதான வீதியில் வெள்ள நீர் பெறுக்கெடுத்துள்ளமையினால் இளவங்குளம் வீதியூடான போக்குவரத்துக்களும் பாதீப்படைந்துள்ளது.

அனுராதபுரம் நாச்சியாதீவு குளத்தின் அனைத்து அனைக்கட்டுகளும் திறந்து விடப்பட்டுள்ளமையினால் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் மடுக்கரை அச்சங்குளம்,இராசமடு ஆகிய கிராமங்களிலும் தற்பொது வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.தற்போது மன்னார் தீவுப்பகுதிக்குள் உள்ள பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

-இதே வேளை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மூர்வீதி,உப்புக்குளம்,பள்ளிமுனை,நலவன்வாடி,பொரியகடை, சின்னக்கடை, சௌத்பார், சாந்திபுரம், பனங்கட்டுக்கோட்டு,எமிழ் நகர்,எழுத்தூர் ஆகிய கிராமங்களிலும் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

-தற்போது வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் மக்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதீக்கப்பட்ட இடங்களை மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் ,  அனார்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட இணைப்பாளர் முஹமட் றியாஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு வருவதோடு வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதோடு இடம் பெயரும் மக்களுக்கு உலர் உணவுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றமையினால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல முடியாத நிலையில் உள்ளமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.















மன்னார் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது-(படங்கள் இணைப்பு)2ம் இணைப்பு Reviewed by NEWMANNAR on November 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.