சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திட்டத்தின் யாழ் மாவட்ட பயனாளிகளுக்கான உள்ளீடுகள் வழங்கி வைப்பு -Photos
சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திட்டத்தின் யாழ் மாவட்ட பயனாளிகளுக்கான உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட விசேட வாழ்வாதார திட்டத்தின் கீழ் இதுவரை வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார திட்ட உள்ளீடுகள் கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்பட்ட நிலையில் 06-11-2015 யாழ்மாவட்ட பயனாளிகள் 43 பேருக்கான உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோர் கலந்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கிவைத்தனர்.
சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திட்டத்தின் யாழ் மாவட்ட பயனாளிகளுக்கான உள்ளீடுகள் வழங்கி வைப்பு -Photos
Reviewed by NEWMANNAR
on
November 06, 2015
Rating:

No comments:
Post a Comment