அண்மைய செய்திகள்

recent
-

பொது மக்­களின் முறைப்­பா­டு­களை பதி­வு­செய்ய விசேட தொலை­பேசிச் சேவை அறி­முகம்...


யாழ்ப்­பா­ணத்தில் அதி­க­ரித்­துள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் சமூ­க­வி­ரோத செயல்கள் தொடர்­பாக பொது மக்கள் முறைப்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக விசேட தொலை­பேசி சேவையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேத­நா­யகன் தெரிவித்­துள்ளார்.


மாவட்ட செய­ல­கத்தில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அண்மைக் கால­மாக யாழ்.குடா­நாட்டில் அள­வுக்­க­தி­மான போதைப்­பா­வ­னை­களும் சமூ­க­வி­ரோத செயல்­களும் தலை­தூக்­கி­யுள்­ளன. இதனை கட்­டுப்­ப­டுத்தும் முக­மாக விசேட முறைப்­பாட்டு செயற்பாடொன்றை ஏற்­ப­டுத்­த­வுள்­ள­தாக ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்த நிலை­யி­லேயே தற்­போது இவ் விசேட தொலை­பேசி முறை­மை அறி­மு­க­மா­கி­யுள்­ளது.
இத­னூ­டாக போதைப் பொருள் பாவனை மற்றும் சமூக விரோத செயல்கள் மட்­டு­மின்றி அரச அதி­கா­ரி­க­ளு­டைய முறை­கே­டுகள் தொடர்­பா­கவும் முறை­யி­ட­மு­டியும். அத்­துடன் இவ்­வாறு பொது­மக்­களால் மேற்­கொள்­ளப்­படும் முறைப்­பா­டுகள் இர­க­சி­ய­மான முறையில் வைத்­தி­ருக்­கப்­படும்.
இவை தொடர்பில் பொது­மக்கள் கவ­லை­ய­டையத் தேவை­யில்­லை­. பொது­மக்கள் தமது முறைப்­பா­டு­களை 0212225000 என்ற தொலை­பேசி இலக்­கத்தின் ஊடாகமேற்கொள்ளமுடியும். தற்­போது இந்த முறைப்­பா­டுகள் அலு­வ­லக நேரத்தில் மாத்­தி­ரமே பதிவு செய்ய முடியும்.
எதிர்வரும் ஆண்டு ஜனவரியில் இருந்து 24 மணிநேரமும் முறைப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொது மக்­களின் முறைப்­பா­டு­களை பதி­வு­செய்ய விசேட தொலை­பேசிச் சேவை அறி­முகம்... Reviewed by Author on November 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.