5000 பெண்களுடன் உறவு : பிளேபோய் பாணி வாழ்க்கை வாழ்ந்த நடிகர்க்கு எச்.ஐ.வி...
அமெரிக்காவின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தனது சிறந்த நடிப்பால் புகழ்பெற்ற பிரபல நடிகர்களில் ஒருவரான 50 வயதுடைய சார்ளி ஷீன், தனக்கு எச்.ஐ.வி.தொற்று இருப்பதாகவும் தான் 5000 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
திரையுலகுக்கு அப்பால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை மிகுந்தகவே காணப்பட்டது.
சார்ளி ஷீனால் பெண்கள் பலருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருக்குமோ என அஞ்சப்படுகிறது. 5000 பேர் யார் என்பது தெரியாவிட்டாலும் குறைந்தபட்சம் 22 பிரபலமான பெண்கள் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
4 வருடகாலமாக, அதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து தனக்கு எச்.ஐ.வி. உள்ளதாகவும் எனினும், அது எயிட்ஸ் நோயாக முற்றவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எச்.ஐ.வி. தொற்றியிருப்பதை வெளிப்படுத்தாமல் பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
ஆனால், தன் மூலம் மற்றவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்றியிருக்கும் என தான் கருதவில்லை என சார்ளி ஷீன் கூறுகிறார்.
அதேவேளை, தனக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்துகொண்ட சிலர் இத்தகவலை வெளியிடாமல் இருப்பதற்காக ஒரு கோடி அமெரிக்க டொலர் வரை தன்னிடம் பணம் பறிக்க முயன்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
5000 பெண்களுடன் உறவு : பிளேபோய் பாணி வாழ்க்கை வாழ்ந்த நடிகர்க்கு எச்.ஐ.வி...
Reviewed by Author
on
November 19, 2015
Rating:

No comments:
Post a Comment