அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கியது முழுமையான விடுதலையல்ல: நீதியமைச்சு விளக்கம்...


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பாரதுரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத சந்தேகநபர்கள், கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் அது முழுமையான விடுதலையாக அமையாது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
60 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவது பாரிய தவறு என அர்த்தம் கற்பிப்பதற்கு சிலர் முயல்வதாக நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதோடு இவ்வாறு விடுதலை செய்யப்படிருப்பது பாரதுரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் அல்லவென நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாரிய குற்றங்களுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படிருந்த 140 சந்தேகநபர்களை 2010 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டதை, குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற குழுக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுகின்ற இந்த சநதர்ப்பத்தில் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மக்களை திசை திருப்புவதற்கு முற்பட்டால், நாட்டில் இன ரீதியான பிரிவுகள் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதால் இவற்றை கருத்திற்கொண்டு அனைத்து தரப்பினரும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என நீதிஅமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கியது முழுமையான விடுதலையல்ல: நீதியமைச்சு விளக்கம்... Reviewed by Author on November 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.