தரமான உலக பல்கலைக் கழகங்கள் பட்டியல்: இந்திய பல்கலைக்கழகம் சாதனை...
முதல் முறையாக தரமான உலக பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்று இடம் பிடித்துள்ளது.
'டைம்ஸ் ஹையர் எஜுகேசன்' என்ற கல்வி தொடர்பான இதழ், உலகம் முழுக்க செயல்படும் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கல்லுரிகளை வகைப்படுத்தி பட்டியல் தயாரித்துள்ளது.
இந்நிலையில், இந்த பட்டியலில், பெங்களுருவில் செயல்படும் இந்திய அறிவியல் நிறுவனத்துக்கு (ஐஐஎஸ்சி) 99வது இடம் கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் இந்திய கல்வி நிறுவனம் ஒன்று இடம் பிடிப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை சேர்ந்த, ஸ்டான்ஃபோர்ட், கால்டெக் மற்றும் மசாசூசெட்ஸ் ஆகிய பல்கலைக்கழகங்கள் இந்த பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.
ஆசிய நாடுகளை சேர்ந்த 22 பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 25 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், முதல் 30 இடங்களுக்குள் ஆசியாவை சேர்ந்த 6 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தரமான உலக பல்கலைக் கழகங்கள் பட்டியல்: இந்திய பல்கலைக்கழகம் சாதனை...
Reviewed by Author
on
November 13, 2015
Rating:
Reviewed by Author
on
November 13, 2015
Rating:


No comments:
Post a Comment