அண்மைய செய்திகள்

recent
-

தப்பிக்க முயன்ற சிறுமி: அடித்துக் கொலை செய்த ஐ.எஸ் அமைப்பு


ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இருந்து தப்பியோட முயன்ற 17 வயது சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சம்ரா கெசினோவிச்(17) மற்றும் அவரது தோழி சபினா செலிமோவிச்(15) ஆகிய இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் சென்றுவிட்டனர்.

இவர்கள், தாங்கள் ஐஎஸ் இயக்கத்தில் இணையவிருப்பதாகவும், தங்களை தேட வேண்டாம் எனவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளனர்.

ஐஎஸ் அமைப்பில் இணைந்த இவர்கள், தீவிராதிகளை திருமணம் செய்துகொண்டனர், பின்னர் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதும், தீவிரவாதத்திற்கு ஆதரவாக நம்பிக்கையூட்டும் வசனங்களை பேசி மற்றவர்களை இந்த இயக்கத்திற்கு சேர்ப்பதுமான பணிகளை செய்துவந்துள்ளனர்.

இந்நிலையில், 17 வயதான சம்ரா ஐஎஸ் இயக்கத்தில் இருந்து தப்பியோட முயற்சித்துள்ளார், இதனை கண்டுபிடித்த தீவிரவாதிகள் அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர்.

இந்த செய்தியை ஆஸ்திரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. மேலும் இந்த தகவலை அச்சிறுமியின் பெற்றோர்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தப்பிக்க முயன்ற சிறுமி: அடித்துக் கொலை செய்த ஐ.எஸ் அமைப்பு Reviewed by Author on November 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.