அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய கோரி மகஜர் கையளிப்பு=படங்கள்
நாம் மிகவும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்திருக்கும் மக்கள் ஆவோம்.எமது பிரதேச மக்களின் வைத்திய தேவைக்காக மாலையில் அல்லது இரவில் வைத்தியசாலைக்கு சென்றால் அங்கு வைத்தியர் இல்லாமல் நாம் கடும் அவதிக்கு உள்ளாகிறோம் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
பின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரிடம் தமது கோரிக்கை அடங்கி மகஜரை அடம்பன் கிராம மக்கள் சார்பாக கையளித்தனர்.
குறித்த மகஜரிலே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது,,
அவ் மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,
அடம்பன் பிரதேச வைத்தியசாலை மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவின் 20 கிராம அலுவலர் பிரிவிற்குற்பட்ட பல விவசாய கிராமங்களை தன்னகத்தே உள்ளடக்கி தனது சேவையை வழங்கி வருகின்ற ஒரு வைத்தியசாலை ஆகும்.
இவ் வைத்தியசாலையில் கடந்த காலங்களில் மூன்றிற்கும் (3) மேற்பட்ட வைத்தியர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.
அத்துடன் இவ் வைத்தியசாலையில் விடுதி வசதியும் மகப்பேற்று வசதியும் முன்னைய காலங்களில் மிகச் சிறப்பாக இயங்கி வந்துள்ளது.
இந்நிலையில் விடுதியும் மகப்பேற்று விடுதியும் தற்போது புதிதாக திறந்து வைத்து மருத்துவர்கள் இன்மையால் அவை வெறுமையாக காணப்படுகிறது.
தற்போது தினமும் 200 இற்கு மேற்பட்ட நோயாளிகள் (விசக்கடி, இருதயநோய் உட்பட) தினமும் வைத்தியசாலைக்கு வருகிறார்கள்.
ஆனால் தற்போது உள்ள ஒரு வைத்தியரால் 60 நோயாளர்களை மட்டுமே பார்வையிட முடியும்.
ஏனையவர்கள் மன்னார், முருங்கன் போன்ற வைத்தியசாலைக்கு தினமும் திரும்பிச் செல்கிறார்கள். இவ்வைத்தியசாலைக்கு 8 வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாக அறிகின்றோம்.
இதே வேளை இவ் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் இவ் விடயம் தொடர்பாக மாவட்ட வைத்திய அதிகாரிக்கு பல தடவை எழுத்து மூலமும் நேரடியாகவும் தெரியப்படுத்தி இதற்கான நல்ல தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
இதன் பின் இக் குழுவினர் பிரதம செயலாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர், ஆகியோரை யாழ்ப்பாணத்தில் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.தீர்வினை எதிர் பார்த்திருந்தார்கள்.
அதன் பின் மன்-தட்சனா மருத மடு பாடசாலையில் அன்மையில் நடை பெற்ற நடமாடும் சேவையின் போது வடமாகாண முதலமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
அதற்கும் நல்ல தீர்வு இது வரை எட்டப்படவில்லை என்பது எமக்கு மிகவும் வேதனையைத் தருகிறது.
நாம் மிகவும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்திருக்கும் மக்கள் ஆவோம்.
எமது பிரதேச மக்களின் வைத்திய தேவைக்காக மாலையில் அல்லது இரவில் வைத்தியசாலைக்கு சென்றால் அங்கு வைத்தியர் இல்லாமல் நாம் கடும் அவதிக்கு உள்ளாகிறோம்.
மகப்பேற்றுக்கான கிளினிக், பிரசவம் போண்றவற்றிற்காக மன்னார் வைத்தியசாலையே நாடவேண்டியுள்ளது.
இதனால் எமது சிரேஸ்ட பிரஜைகள், கற்பிணித் தாய்மார்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
எனவே எமது உயிர் ஜீவனமாக உள்ள எமது வைத்தியசாலைக்கு இரவு பகல் சேவை செய்வதற்கு மூன்று நிரந்தர வைத்தியரை நியமனம் செய்ய வேண்டும்,இயங்காமல் இருக்கும் பிசவ விடுதியை இயங்கவைத்து பிசவத்தை இவ் வைத்தியசாலையில் பிரசவிக்க வசதி செய்து தருதல், வைத்தியர்கள் தங்குவதற்கான விடுதி வசதிகளை உடன் ஏற்படுத்தி தருதல்,வைத்தியசாலைக்கு தேவையான அத்தியவசிய வைத்திய உபகரணங்களை உடன் வழங்கி உதவுதல் போன்ற தேவையினை பெரு மனம் கொண்டு நிறைவேற்றி தருமாறு அடம்பன் மக்களாகிய நாம் ஆகாரிக்கை விடுக்கின்றோம். என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய கோரி மகஜர் கையளிப்பு=படங்கள்
Reviewed by NEWMANNAR
on
November 25, 2015
Rating:

No comments:
Post a Comment