மன்னாரில் வெள்ள நீரில் மனிதக்கழிவுகள் கலந்துள்ளதாக மக்கள் விசனம்.Photos
மன்னார் பகுதியில் தேங்ககியுள்ள வெள்ள நீரினால் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பாதீக்கப்ட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சௌத்பார்,சாந்திபுரம்,எமிழ்நகர்,ஜிம்ரோன் நகர் போன்ற கிராமங்களைச் சுற்றி தற்போது வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
குறித்த கிராமங்களில் உள்ள அதிகளவான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது தேங்கியுள்ள வெள்ள நீரில் மனிதக்கழிவுகள் கலந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பல்வேறு கழிவுகளும் வெள்ள நீரில் கலந்துள்ளமையினால் சிறுவர்களுக்கு தொற்று நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெள்ள நீர் கிராமங்களில் சூழ்ந்து கொண்டுள்ளமையினால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் காணப்பட்ட மலசல கூடங்களும் வெள்ள நீரில் நிறம்பியுள்ளது.அதன் காரணமாக மலசல கழிவுகள் நீரில் கலந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் வெள்ள நீரில் மனிதக்கழிவுகள் கலந்துள்ளதாக மக்கள் விசனம்.Photos
Reviewed by NEWMANNAR
on
November 18, 2015
Rating:

No comments:
Post a Comment