தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட,கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று (13) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
சிறைக்கைதிகளோடு ஒன்றித்து , அவர்களின் நிலை குறித்து உலகிற்கு எடுத்து காட்டும் முகமாக இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் கைதிகளின் விடுதலையில் காணப்படும் தடைகளை தகர்த்தெரியக்கூடிய வகையில் மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் முகமாக இந்த ஹர்த்தால் இன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தவகையில் இரு மாகாணங்களிலுமுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளை மூடி மிகவும் அமைதியான முறையில் ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியம் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் முடங்கிப்போயுள்ளன.
போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.

Reviewed by NEWMANNAR
on
November 13, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 13, 2015
Rating:

No comments:
Post a Comment