அண்மைய செய்திகள்

recent
-

முரண்பாட்டிற்கு பின்னரான காயங்களை ஆற்றும் பணி-மன்னாரில் பெண்களுக்கு விசேட கருத்தமர்வு(படங்கள்)

முரண்பாட்டிற்கு பின்னரான காயங்களை ஆற்றும் பணி எனும் கருப்பொருளில் பெண்களுக்கான கொள்ளை விளக்க கருத்தமர்வு ஒன்று இன்று வியாழக்கிழமை(19) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம் பெற்றது.

மன்னார் சமாதானத்திற்கும் மீள் இனக்கத்திற்குமான வழங்கள்(ஆர்.பி.ஆர்) மற்றும் தேசிய சமாதானப்பேரவை ஆகியவை இணைந்து முரண்பாட்டிற்கு பின்னரான காயங்களை ஆற்றும் பணி எனும் கருப்பொருளில் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு குறித்த கருத்தமர்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த கருத்தமர்வில் காணாமல் போனவர்களின் உறவினர்கள்,யுத்தத்தினால் பாதீக்கப்பட்டவர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள்,  என பாதீப்புக்களை சந்தித்த மும்மதத்தையும் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச்ச செயலாளர் பிரிவு மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள 6 கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 பேர்குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் சமாதானத்திற்கும் மீள் இனக்கத்திற்குமான வழங்கள்(ஆர்.பி.ஆர்) மற்றும் தேசிய சமாதானப்பேரவை ஆகியவற்றின் பிரதி நிதிகள்,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க்,உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது யுத்தத்தினால் பாதீக்கப்பட்டு உறவுகளை இழந்த பெண்கள் மற்றும்,காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது வாழ்வில் ஏற்பட்டுள்ள இன்னல்களை அனுபவப்பகிர்வாக பகிர்ந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பாதீக்கப்பட்ட மக்கள் சார்பான மும்மதத்தையும் உள்ளடக்கி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.










முரண்பாட்டிற்கு பின்னரான காயங்களை ஆற்றும் பணி-மன்னாரில் பெண்களுக்கு விசேட கருத்தமர்வு(படங்கள்) Reviewed by NEWMANNAR on November 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.