அண்மைய செய்திகள்

recent
-

உலகில் 57 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லமுடியாத நிலை: ஐ.நா....


2000ஆம் ஆண்டு 100மில்லியன் சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாத நிலையிருந்ததாகவும் ஆனால் 2015ஆம் ஆண்டு அது 57மில்லியனாக குறைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின்(யுனிசெப்) மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் திட்ட இணைப்பாளர் கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் தினம் நேற்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை சபையானது ஆரம்பிக்கப்பட்டு 70வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டும் இலங்கையானது ஐ.நா.வில் இணைந்து 60 ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டும் இந்த நிகழ்வு நடாத்தப்பட்ட இந்நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின்(யுனிசெப்) மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் திட்ட இணைப்பாளர் கே.ரவிச்சந்திரன்,

இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையினான் பல அமைப்புகள் பல்வேறு சேவைகளையாற்றிவருகின்றது. சுனாமி மற்றும் யுத்தம், இயற்கை அனர்த்தங்களின்போது பல்வேறு சேவைகளையாற்றியுள்ளது.

அத்துடன் தமது அமைப்புகளின் ஊடாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் மனிதர்களின் அபிவிருத்துக்கும் பல்வேறு பணிகளை ஆற்றிவருகின்றது.

மிலேனியம் அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2030ஆம் ஆண்டுவரையில் அபிவிருத்தியை இலக்காக கொண்டு பணிகள் இலங்கையில் ஐ.நாவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

உலகளாவிய ரீதியில் 2014ஆம் ஆண்டு 90மில்லியன் சிறுவர்கள் நிறை குறைந்த சிறுவர்களாக உள்ளனர். அத்துடன் 2000ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் 100மில்லியனாக இருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டு இது 57 மில்லியனாக குறைந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் யுத்தம், வறுமை, அவசரகால நிலைமை மற்றும் பல்வேறு காரணங்களினால் சிறுவர்களுக்கு தரமான கல்வியை பெறமுடியாத நிலைமை பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

1990 -2015வரையில் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை 2.1பில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் எதிர்வரும் 2050ஆம் ஆண்டு நான்கில் ஒரு பகுதியினர் தண்ணீர் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளுவார்கள்.

ஐக்கி நாடுகள் சபையானது மலிவான நம்பகமான சக்தியை மலிவான மின்சக்தியை பெற்றுக்கொள்வதற்கு உதவி வருகின்றது. சோலர் மற்றும் காற்றின் மூலமாக மின்சாரங்களை பெறுவதற்கு ஊக்குவித்து வருகின்றது.

அத்துடன் நிறையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்குமான திட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுவருகின்றது.

இன்று உலகளாவிய ரீதியில் 200மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். இவர்களில் ஐந்து வீதமானவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர் என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள இணைப்பாளர் மார்க் பீட்டர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,

மட்டக்களப்பு மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலக பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ரஹ{மான் மற்றும்  வர்த்தக விவசாய கைதொழில் சம்மேளனத்தின் முகாமையாளர் எஸ்.குகதாசன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

தன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், பிரதேசசபைகளின் செயலாளர்கள்,ஐ.நா.வின் இணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

உலகில் 57 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லமுடியாத நிலை: ஐ.நா.... Reviewed by Author on November 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.