மன்னாரில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு-08-12-2015
மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ்அதிகாரிகளுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று 08-12-2015 செவ்வாய்க்கிழமை காலை 9-30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை நகர மண்டபத்தில் நடைபெற்றது.
அநுராதபுரத்தில் இருந்து வருகை தந்திருந்த உயர் அதிகாரிகளினால் இயற்கையாக ஏற்படுகின்ற அனர்த்தங்கள் அதனால் ஏற்படுகின்ற பேரழிவுகள் இழப்புக்களை தவிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் மக்களை விழ்ப்புணர்வுடன் வைத்திருக்க ஏதுவான காரணகாரணிகளை தெளிவான முறையில் விளக்கப்படங்களுடன் ஆவணங்களாகவும் தெளிவு படுத்தினர்.
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு- மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம்
நிதிப்பங்களிப்பு- அனர்த்த முகாமைத்துவ அமைச்சு.
மன்னாரில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு-08-12-2015
Reviewed by Author
on
December 08, 2015
Rating:

No comments:
Post a Comment